செகமாட், (ஜொகூர்). ஆக. 27-
ஜொகூர் , செகமாட் தொகுதிகளில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில், புதிய கோவிட்-19 தொற்று சம்பவங்களை தவிர்க்கும் வகையாக, புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.முகத்தை அடையாளம் காண்பது, சுவாசக்கவசத்தை அணிந்திருப்பதை உறுதிச் செய்வது மற்றும் வெப்பநிலையை அறிவிப்பது போன்ற அம்சங்களை அத்தொழில்நுட்பம் உள்ளடக்கியுள்ளது.
இச்சாதனமானது, 0.03 செல்சியஸ் வரையில், மிக துல்லியமாக வெப்பநிலையை அளவிடக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. உலகளாவிய நிலையில், கோவிட் 19 –தின் தாக்கம் தீவிரமடைந்ததை அடுத்து, அரசாங்கம் மார்ச் 18-ஆம் தேதி, நாடு முழுவதும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையை விதித்தது.
கடந்த ஜுலை 15-ஆம் தேதி, நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும், அரசாங்கத்தின் கடுமையான தரநிலை இயக்க கட்டுபாடுகளுடன் அடிப்படையில் செயல்படத் தொடங்கின.
மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் பள்ளிக்கு வரும் வருகையாளர்களின் உடல் வெப்பநிலையை தினசரி
சோதனையிட வேண்டும் எனும் கட்டுப்பாட்டை கல்வி அமைச்சு விதித்திருந்தது. 37.5 செல்சியசுக்கும் கூடுதலான வெப்பநிலையைக் கொண்டிருப்பவர்கள் பள்ளி வளாகத்தில் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டது. கூடல் இடைவெளியை கருத்தில் கொண்டு பள்ளிப் புறப்பாட நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் ரத்துச் செய்யப்பட்டன.
இதனிடையே, அரசாங்கத்தின் இந்நடவடிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையாக, செகமாட்டின் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ஶ்ரீ டாக்டர் சந்தாரா குமார் ராமநாயூடு, தமது தொகுதியிலுள்ள பள்ளிகளில் வெப்பநிலையை அளவிடும் கருவியை பொருத்துவதற்கான இரு கட்டத் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
“இந்நடவடிக்கையின் வாயிலாக, பள்ளிகளில் புதிய தொற்றுகளை உருவாகமல் இருப்பதை தடுக்க முடியும்,” என கூட்டரசு துணையமைச்சருமான சந்தாரா குமார் கூறினார். மூன்று அம்சங்களை ஒருங்கே கொண்டிருக்கும் அச்சாதனத்தின் வழி, புதிய நோய்த் தொற்றுகளை எளிதாக கண்டறிய முடிவதோடு, மாணவர்களின் பரிச்சோதனை முடிவுகளை காப்பகப்படுத்தவும், அதை எந்நிலையிலும் மீட்டெடுப்பதற்கும் துணைப் புரிகின்றது.
பள்ளியிலிருக்கும் ஒவ்வொரு மாணவர்களின் தரவுகளை நேர்த்தியாக சேகரிக்கக்கூடிய ஆற்றலை அச்சாதனம் கொண்டிருப்பதோடு, எட்டு அங்குல துல்லிய (HD) திரையையும் , துல்லியமாக முகத்தை கண்டறியக்கூடிய அம்சங்கள் அதிலிருப்பதாக , அச்சாதனத்தை விநியோகிக்கும் நிறுவனமான Labquip (M) Sdn Bhd கூறியுள்ளது.
இச்சாதனம், ஆசிரியர்களின் வேலைப்பளுவை குறைப்பதோடு, கவனக்குறைவால் ஏற்படும் பிழைகளையும் குறைப்பதாக அந்நிறுவனத்தின் மேலாளர் திரு.ஜெயபிரக்காஷ் ராவ் கூறினார்.தானியங்கி முறையில் செயல்படும் இச்சாதனம் , செகமாட்டில் உள்ள 47 பள்ளிகளில் பொருத்துவதற்கு வகைச் செய்யப்பட்டுள்ளது. தமிழ், சீன மற்றும் சமயப் பள்ளிகளும் அதில் அடங்கும். தற்போது, 20 பள்ளிகளில் அச்சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
தலா ஆறாயிரம் ரிங்கிட் மதிப்பிலான அச்சாதனத்தின் வழி, குறைந்தது 39-ஆயிரம் மாணவர்கள் தினசரி தங்களின் வெப்பநிலையை பரிசோதித்து வருகின்றனர். இங்குள்ள ஆறு தமிழ்ப்பள்ளிகளிலும், அச்சாதனத்தை பொருத்துவதற்கு வகைச் செய்யப்பட்டுள்ளது. அதோடு, அனைத்து பள்ளிகளுக்கும் வெப்பநிலையை கண்காணிக்கும் கையடக்க கருவிகளும் வழக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஒவ்வொரு மாணவர்களின் முக அடையாளத்தின் வழி, வெப்பநிலையை கண்டறியும் இச்சாதனம், தங்களின் சுமையை குறைத்துள்ளதாக நாகப்பா தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வாணி ஜெயராமன் நன்றி தெரிவித்தார். இப்புதிய அம்சம், அரசாங்கம் விதித்திருக்கும் தர கட்டுப்பாட்டை இலகுவாக செயல்படுத்த உதவுவதாக அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளி மைதானத்திற்கும், இணைக் கட்டத்திற்கும் நிதியுதவி வழங்கிய டத்தோ ஶ்ரீ டாக்டர் சந்தாராவுக்கு அவர் நன்றி தெரிவித்து கொண்டார். இப்பள்ளியைப் போன்று, பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளிக்கும், அவர் புதிய புட்சால் திடலை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளார். ஜுலை ஒன்றாம் தேதித் தொடங்கி , கூடல் இடைவெளியை நிலை நிறுத்தும் மூன்று நிலையிலான தர அமல்முறைகளுடன் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
ஜோகூர் மாநிலத்திலுள்ள பெரும்பாலான பள்ளிகள், சமூக இடைவெளியைக் கொண்ட ஒரு நேர பள்ளி முறையை பின்பற்றி வருகின்றன. அதில், 15.8 விழுக்காட்டு பள்ளிகள் மட்டுமே, இரு நேர பள்ளி முறையை பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேல் விவரங்களுக்கு ராணி @ 012-3795735 தொடர்பு கொள்ளவும்.


