Homeகுற்றவியல்கெடா அமான்ஜெயாவில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிரகடனம்! இஸ்மாயில் சம்ரி

கெடா அமான்ஜெயாவில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு பிரகடனம்! இஸ்மாயில் சம்ரி

புத்ராஜெயா, ஆக. 27-

கெடா அமான்ஜெயாவில் கடுமையாக்கப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவைச் செயல்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சர் (முதன்மை) டத்தோஶ்ரீ இஸ்மாயில் சம்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

இதனை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கையை அமல்படுத்தும் முடிவை வியாழக்கிழமை கூடிய சிறப்பு அமைச்சரவை கூட்டம் முடிவு செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.01 தொடங்கி அப்பகுதியில் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு அமல்படுத்தப்படும். சுகாதார அமைச்சு அறிவிக்கும் வரை இது நடைமுறையில் இருக்குமென சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பகுதி கெனங்கா, மாவார் மற்றும் மெலூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் உள்ளடக்கியது. 265 வீடுகளும் 22,369 நபர்களும் இதில் அடக்கம் என அவர் மேலும் கூறினார்.

அப்பகுதிகளில் உள்ள அனைவரும் கொவிட் 19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று இஸ்மாயில் சம்ரி கூறினார்.

அப்பகுதியில் வசிப்பவர்கள் வேலைக்குச் செல்வதற்குக் கூட அந்த இடத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதேபோல், வெளியாட்கள் அப்பகுதிக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதோடு அப்பகுதிகளைச் சுற்றி சாலைத் தடுப்புகள் அதிகாரிகளால் அமைக்கப்படும்.

வேலைக்குச் செல்ல முடியாத தொழிலாளர்கள் மீது முதலாளிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

இப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகின்றன, இதில் உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை அடங்கும்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே உணவு விடுதிகள் செயல்பட முடியும். மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் 24 மணிநேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

ஒரு குடும்ப பிரதிநிதி மட்டுமே உணவு அல்லது தேவைகளை வாங்க ஒவ்வொரு நாளும் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார் என இஸ்மாயில் சம்ரி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more