Homeமலேசியாகொவிட் 19: எண்ணிக்கை உயர்ந்ததா? குழப்பததை ஏற்படுத்தும் சுகாதார அமைச்சின் அறிக்கை!

கொவிட் 19: எண்ணிக்கை உயர்ந்ததா? குழப்பததை ஏற்படுத்தும் சுகாதார அமைச்சின் அறிக்கை!

புத்ராஜெயா, ஆக. 27-
மலேசியாவில் இன்று கொவிட் 19 கிருமித் தொற்று காரணமாக 25 சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்ற அறிவிப்பை வெளியிட்டு அதனை 5ஆக தற்போது மாற்றி சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கிருமித் தொற்றுக்கு ஆளானவர்களில் 16 சம்பவங்கள் மலேசியாவில் நிகழ்ந்தது என்றும் 9 சம்பவங்கள் வெளிநாட்டைச் சார்ந்தது என சுகாதார அமைச்சு அறிக்கை கூறியிருந்தது. தற்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 என சுகாதார அமைச்சு கூறியுள்ளது. மலேசியாவை சார்ந்து 3 சம்பவங்களும் வெளிநாட்டை சார்ந்து 2 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இன்றைய பாதிப்பு என சுகாதார அமைச்சு வெளியிட்ட புதிய பட்டியல்

இருப்பினும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இதனிடையே இன்று 16 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த காரணமாக இதுவரையில் இந்த கிருமித் தொற்றுக் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,296 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களின் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 பேர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியை நாடியுள்ளார்.

இந்த கிருமித் தொற்றின் காரணமாக மரணச் சம்பவங்கள் நிகழவில்லை. அதனால் கொவிட் 19 காரணமாக மலேசியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 125ஆக நீடிக்கின்றது. இது 1.35 விழுக்காடு ஆகும்.

இன்று 16 பேர் குணமடைந்துள்ளார்கள். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,994 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

latest articles

explore more