spot_img
11.8 C
London
spot_img
Home மலேசியா கல்வி ஈப்போவிலிருந்து ஆக்ஸ்ஃபோர்டுக்குப் பறக்கவிருக்கும் சுபாஷ் வடிவேலர்

ஈப்போவிலிருந்து ஆக்ஸ்ஃபோர்டுக்குப் பறக்கவிருக்கும் சுபாஷ் வடிவேலர்

0
528

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 11:-

மலாயா பல்கலைக்கழக மருத்துவத்துறை இறுதி ஆண்டு மாணவரான சுபாஷன் வடிவேலருக்கு இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இரட்டை முதுகலைப் பட்டப் படிப்பை ரோட்ஸ் உபகாரச் சம்பளத்துடன் தொடருவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

அடுத்தாண்டு அக்தோபர் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தனது இரட்டை முதுகலைப் பட்டப் படிப்பை மேற்கொள்வார்.

தமிழ்மொழி ஆசிரியரானத் தாயாருக்கும் தொழில்முனைவரான தந்தைக்கும் பிறந்த சுபாஷன் ஈப்போ செயிண்ட் மைக்கல் பள்ளியில் படித்தார். மலாயாப் பல்கலைக்கழகத்தில் டெங்கியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அதிகம் கவனித்த அவர், டெங்கி உட்பட தொற்று நோய்களை முழுதாக ஒழிக்கப் பாடுபடுவதே தனது முதன்மைக் குறிக்கோள் எனத் தெரிவித்தார்.

மலாயாப் பல்கலைக் கழக மருத்துவத்துறை பிரிவின் மிகப் பெரிய ஆதரவால் தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பட்டப் படிப்பு வாய்ப்பு தனக்குக் கிடைக்க மிகப் பெரும் உதவியாக இருந்தது  எனக் குறிப்பிட்டார்.

“டெங்கிக்கு மருந்து கண்டுபிடிப்பேன் !”

– சுபாஷன் வடிவேலர்

“

குடும்பத்தின் கடைக்குட்டியான சுபாஷனுக்கு இரண்டு வயது மூத்த அக்கா ஒருவர் இருப்பதாகவும் அவர் தண்ணீர் சுத்திகரிப்பு வேதியியலாளராகப் பணிபுரிகிறார் என்றும் தெரிவித்தார்.  

கோவிட்-19 பெருந்தொற்றால் உலகளாவிய நிலையில் நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் தடைப்பட்டிருந்தாலும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் இன்னும் நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தல் முறை தான் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அடுத்தாண்டு அக்தோபரில் ஈப்போவிலிருந்து ஆக்ஸ்ஃபோர்டுக்குப் பறக்கவிருக்கும் சுபாஷன், நேரடி வகுப்பறை கற்றல் கற்பித்தலை அனுபவிக்கக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

அவருக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதில் அநேகன் பெருமை கொள்கிறது.