கோலாலம்பூர், பிப். 11-
தேசியக் கூட்டணியில் (Perikatan Nasional) கெராக்கான் கட்சி இணைந்துள்ளதாகப் பிரதமரும் அக்கூட்டமைப்பின் தலைவருமான தான்ஶ்ரீ முகீடின் யாசின் தெரிவித்தார்.
தேசியக் கூட்டணியில் கெராக்கான் கட்சியை இணைத்துக் கொள்வதற்கு உச்ச மன்றம் பிளவுபடாத ஆதரவை வழங்கியுள்ளதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அனைத்து இனங்களையும் பிரதிநிதிக்கும் கெராக்கான் கட்சி தேசியக் கூட்டணியில் இணைந்திருப்பது அனைத்து சமூகத்திற்கு இக்கூட்டணி முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை எடுத்துரைக்கின்றது.
முன்னதாக தேசியக் கூட்டணியில் இணைவதற்கான கெராக்கான் கட்சியின் விருப்பம் வரவேற்கத்தக்கது. என்றார் பிரதமர்
வளமான,நிலையான மேம்பாட்டை நோக்கிப் பயணிக்கும் மலேசியாவை உருவாக்கத் தேசியக் கூட்டணி தொடர்ந்து உறுதியுடன் இருக்குமெனப் பிரதமர் தான்ஶ்ரீ முகீடின் யாசின் தமது அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தேசியக் கூட்டணியில் கெராக்கான் கட்சியை இணைந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை அக்கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ், பிரதமரின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


