கோலாலம்பூர் | பிப்பரவரி 11:-
2021ஆம் ஆண்டு இறுதிக்குள் e-LATiH இலவச இணையப் பயிற்சித் திட்டத்தின்வழி 2 மில்லியன் மலேசியர்கள் பங்கெடுத்து பயன் பெற வேண்டும் என எச்.ஆர்.சி.எஃப். எனப்படும் மனிதவள மேம்பாட்டு நிதியம் தெரிவித்தது.
குறிப்பாக இந்தக் கட்டற்றப் பயிற்சித் தளத்தில் இருக்கும் 200க்கும் மேற்பட்டப் பயிற்சிகளை இந்தியர்கள் இந்த கோவிட்-19 காலத்தில் நன்கி பயன்படுத்தி பலன் பெற வேண்டும் என அதன் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ சாகுல் ஹமீட் குறிப்பிட்டார்.
கடந்த பிப்பரவரி 6ஆம் நாள் மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம் சரவணன் அறிமுகம் செய்து வைத்த இந்தத் திட்டத்தில் தற்போது 15,000 பேருக்கும் மேல் பதிந்து பயிற்சியை மேற்கொள்கிறார்கள். ஒருவர் ஒரு பயிற்சிக்கும் மேலாகவே கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதுவரை மொத்தமாக பயிற்சிகள் கற்கப்பட்டு நிறைவுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு இருப்பதாக சாகுல் ஹமிட் தெரிவித்தார்.
.png)
கால மாற்றத்துக்கு ஏற்ப நாம் னம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். கோவிட்-19 காலத்தில் நமது நடமாட்டம் அதிகளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது போன்றப் பயிற்சித் திட்டங்களில் நம்மவர்கள் தங்களை ஈடுபத்திக் கொண்டு பயன்பெற வேண்டும். பி40 பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பயிற்சித் திட்டம் சிறந்த பலனைக் கொடுக்க வல்லது. இவற்றுக்கு முறையான சான்றிதழும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இது வரை கலந்து கொண்டவர்களில், 30 % வேலை இல்லாதவர்கள், வேலையை இழந்தவர்கள்; 60 விழுக்காட்டினர் பணியில் மேம்பாடு அடைய முயலும் பணி செய்வோர்; 15 % சுய தொழில் செய்கிறாவர்களும் தங்களின் தொழில் மேம்பாடு அடையவும், தங்களின் துறைகள் தொடர்புடைய திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இந்தப் ப்யிற்சியினை மேற்கொள்கிறார்கள்.
எங்கிருந்து வேண்டுமானாலு, யார் வேண்டுமானாலும் இப்பயிற்சித் திட்டத்தில் பதிந்து கொண்டு தங்களின் சொந்த நேர வசதிப் படி பயிற்சியை மேற்கொள்ளலாம். அதனால்தான் இதில் ஏறத்தாழ 15 % இல்லத்தரசிகள் இணைந்திருப்பதாக சாகுல் ஹமிட் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
தொடர்ந்து, மேலும் 15 % பணி ஓய்வு பெற்றவர்களும் இதில் இணைந்திருப்பதாக அவர் சொன்னார்.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலமே ஆகியிருக்கும் வேளையில் இத்திட்டத்திற்குக் கிடைத்திருக்கும் ஆதரவு மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றாக அமைந்துள்ளது.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக எச்.ஆர்.டி.எஃப்.இன் நடவடிக்கையாக கூடுதலாக 150 பயிற்சிகளை இந்தத் திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன.
இதுவரையில் மிக அதிகமாக 5 முக்கியப் பயிற்சிகள் அதிக அளவில் பதிவு செய்யப்பட்டு பயிலப்பட்டு வருகிறது. Python Learning, Project Management, Time Management, Microsoft PowerPointm, Microsoft Excel, Rosseta Gem Stones ஆகிய 5 பயிற்சிகளே அவை.
மேலும், விவசாயம், கட்டுமானம், உற்பத்தித் துறை, சேவைத் துறைகள் சார்ந்த ப்யிற்சிகளும் இவற்றும் அடங்கும்.
இது வரையில் இந்தியர்கள் ஏறத்தாழ 20 விழுக்காட்டினர் மட்டுமே பயிற்சி பெற்றார்கள். இன்னும் பல பயிற்சிகளைப் பதிந்து இலவசமாக இந்தியர்கள் பயின்று பலன் பெற வேண்டும் என சாகுல் ஹமிட் குறிப்பிட்டார்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://elatih.hrdf.com.my/ என்ற இணையப் பக்கத்தை நாடலாம்.


