முவார் | 14/7/2021 :-
முவார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷேட் சாடிக் ஷேட் அப்துல் இரகுமான் , சிகாம்பூட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹன்னா இயோ ஆகியோரின் உணவு வங்கிகள் மூடப்பட்டுள்ளதாகத் தங்களின் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
உதவி பெறுவதற்காக அதிகமான மக்கள் அவ்விடத்தில் வரிசையில் நிற்பதால் காவல்துறை இந்த ஆணை இட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
அவ்விவகாரம் தொடட்பில் தமக்குத் தண்டம் விதிக்கப்படுமேயானால், அதையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக நம்பிக்கைக் கூட்டணியின் அமைச்சராக இருந்த ஷேட் சாடிக் தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பசியாலும் சிரமத்தாலும் வாடும் மக்கள் வந்து உதவி கோரும்போது அதனைத் தாம் தடுக்க முடியாது எனவும் மூவார் மக்கள் தமது பொறுப்பு எனவும் ஷேட் சாடிக் கூறினார்.
இதனிடையே, தமது சேவை மையத்தில் உள்ள உணவு வங்கிக்கு அதிகமானோர் வந்து உணவுப் பொருட்களை உதவியாகப் பெற்றுச் செல்வதாக ஹன்னா இயோ தமது முகநூலில் குறிப்பிட்டார்.

காவல்துறையினருடன் நடத்திய கலந்தாலோசனைக்குப் பிறகு அது மூடப்படுவதாக அவர் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு 853 பேர் உணவு வங்கிக்கு வருவதாக அவர் கூறினார்.
உணவு வங்கி திறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே பொது மக்கள் சேவை மையத்தை அடைந்து காத்திருக்கிறார்கள். மேலும், செலாயாங், ஜிஞ்சாங், இரவாங், பத்துமலை, பெட்டாலிங் ஜெயா போன்ற மிக தூரமான இடங்களில் இருந்தும் உதவி கோரி இங்கு வருகிறார்கள்.
அரசாங்கத்தின் எந்த மானியத்திலும் இல்லாமல் அரசு சாரா இயக்கங்களாலும் தனிநபர்களாலும் வழங்கப்பட்ட அந்த உதவிப் பொருட்களைப் பொது மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஹன்னா இயோ கூறினார்.
அவ்விதவிகளை 242 மலேசியருக்கும் 611 வெளிநாட்டவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பொது முடக்கத்தால் வருமானம் பாதிக்கப்பட்டவர்கள் தம்மைத் தேடி வந்து உதவிகளைப் பெருகின்றனர் என்றார் ஹன்னா இயோ.
மேலும், குழந்தைகளும் சிறிவர்களும் கொண்டவர்களும் பாலையும் வழங்குகின்றோம். உதவி கோரு வருகிறவர்களைப் பார்த்தபோது வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது.
உணவி வங்கியைத் தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் போனதற்குத் தாம் மன்னிப்பு கேட்பதாகவும் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மாற்று வழியைக் கண்டறியப்படும் என் ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் பொருளாதாரத் துறைகள் மீண்டும் இயங்க தேசியப் பாதுகாப்பு மையம் வழிவகை செய்யவும் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து வீட்டிலேயே தொடர்ந்து இருக்கப் பலரால் முடியாது. கோவிட்-19 அன்றாட நேர்வுகளும் 11,000ஐக் கடந்து விட்டது. மாதாந்திர வாடகைகள், கட்டணங்கள், உணாவுக்கானச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பலர் தவிக்கின்றனர். நேர்வுகள் குறைய இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது?
சரியான எஸ்.ஓ.பி.யை செயல்படுத்தவும் கோவிட்-19 பெருந்தொற்றை மக்கள் எதிர்கொள்ள அவர்களை வலுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஹன்னா இயோ தெரிவித்தார்.


