Homeஅரசியல்அரசாங்கத்துடன் எங்களுக்கு எவ்விதமான ஒப்பந்தமும் இல்லை ! – ஜ.செ.க.

அரசாங்கத்துடன் எங்களுக்கு எவ்விதமான ஒப்பந்தமும் இல்லை ! – ஜ.செ.க.

கோலாலம்பூர் | 14/7/2021 :-

நடப்பில் இருக்கும் தேசியக் கூட்டணி அரசாங்கத்துடன் எவ்விதமான CSA ஒப்பந்தமும் இல்லை என ஜ.செ.க. கட்சியின் துணைத் தலைவர் குலசேகரன் கூறியுள்ளார்.

அம்னோ கட்சியின் உட்பூசலை மக்களின் கவனத்திலிருந்து மறைக்க ஜ.செ.க.வை கவர்ந்திழுக்கும் முயற்சி என அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் தேசியக் கூட்டணிக்கு ஜ.செ.க. ஆதரவு தெரிவிக்கும் எனும் பொய்யானத் தகவல் தற்போது பரவி வருவதாகத் தெரிவித்த அவர், அவ்வாறு ஒரு போதும் நடவாது என உறுதியாகக் கூறினார்.

அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் தஜுடின் அப்துல் இரகுமான்

அம்னோவின் ஆதரவு முறிக்கப்பட்டாலும் தேசியக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்து விடாது என கசிந்த ஒரு குரல் பதிவில் அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஜ.செ.க.வின் ஆதரவை தேசியக் கூட்டணியால் பெற முடியும் என அவர் தெரிவித்தார்.

பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினுக்கு அம்னோ தமது ஆதரவை மீட்டுக் கொண்டிருந்தாலும் அதன் நாடாளுமன்றா உறுப்பினர்கள் தங்களின் சொந்த முடிவை எடுத்து நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவிக்கலாம் என அம்னோ கூறியிருந்தது.

CSA ஒப்பந்த எனப்படுவது யாதெனில் எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சி முடிவு செய்யும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைக் கொண்டு வருவதும் ஆகும். அதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினருக்குப் பிரதமர் சில முக்கியக் கொள்கைகளைப் பரிந்துரைக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

இதனிடையே, இக்குற்றச் சாட்டை வைத்த தஜுடினை ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான குலசேகரன் அடஹ்னை நிரூபிக்கக் கூறியுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணியின் உயர்மட்டத் தலைவர்களான பிகேஆர்-இன் அன்வார் இபுராகிம், அமானாவின் முகம்மட் சாபு, ஜ.செ.கா.வின் லும் குவான் எங் ஆகியோர் பிரதமர் மகியாதீனுடன் எந்த ஒத்துழைப்பும் முன்னெடுக்கப்படாது எனத் தெளிவாகக் கூறியிருந்தனர்.

மேலும், அவர்கள் மகியாதீனைப் பதவி விலகவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இவ்வாறானச் சூழலில் ஜ.செ.க.வுக்கும் தேசியக் கூட்டணிக்கும் இடையே ஒத்துழைப்பு உண்டு எனக் கூறுவது எவ்வாறு சரியாகும் என குலசேகரன் கேள்வி எழுப்பினார்.

spot_img

latest articles

explore more