Homeஅரசியல்மக்களவைத் துணைத் தலைவர் எச்.ஓ.பி. மீறல் : காவல்துறை விசாரணை

மக்களவைத் துணைத் தலைவர் எச்.ஓ.பி. மீறல் : காவல்துறை விசாரணை

ஜோகூர் பாரு | 24/7/2021 :-

மக்களவைத் துணைத் தலைவர் டத்தோ முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் தேசிய மீட்சித் திட்டத்தின் எஸ்.ஓ.பி.யை மீறியக் குற்றத்திற்காக அவர் மீது காவல்துறை நடத்த இருப்பதாக ஜோகூர் மாநில காவல்துறைத் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

பத்து பகாட் அருகே ரெங்கிட் விவசாயப் பகுதியில் அவர் கூடல் இடைவெளியைப் பின்பற்றாமல் விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட படம் நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் பரவி வந்ததைத் தொடர்ந்து அவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என டத்தோ அயூப் கான் கூறினார்.

அந்த நிழற்படத்தில் காணப்படும் தோட்ட உரிமையாளர், பத்து பகாட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ முகம்மட் ரஷிட் ஹஸ்னோன், அவரது மனைவி – மகள் என நம்பப்படும் இரு பெண்கள் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என டத்தோ அயூப் கான் தெரிவித்தார்.

தொற்று நோய்க் கட்டுப்பாடு – தடுப்புச் சட்டம் 2021 பிரிவு 18(1) இன் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டத்தோ முகம்மட் ரஷிட் ஹஸ்னோன் பலருடன் ஒன்று கூடி முள்ளம்பழம் (டுரியான்) உண்பது தொடர்பான காணொலி குறித்து வினவியபோது, விசாரணை அறிக்கையைக் கடந்த 14/7/2021 அன்று தேசிய வழக்கறிஞர் அலுவலகத்திகு அனுப்பப்பட்டு விட்டதாக டத்தொல் அயூப் கான் தெரிவித்தார்.

அதே நேரத்தில், இம்மாநகரில் இருக்கும் தடுப்பூசி மைய ஊழியர்கள் ஒன்று கூடி முள்ளம்பழம் உட்கொண்ட மற்றொரு காணொலி குறித்த விசாரணையும் நடந்து வருவதாக அவர் மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more