Homeஅரசியல்நாடாளுமன்றக் கூட்டத்தை விரைவில் நடத்த மாமன்னர் மகியாதீனுக்குக் கட்டளை ?

நாடாளுமன்றக் கூட்டத்தை விரைவில் நடத்த மாமன்னர் மகியாதீனுக்குக் கட்டளை ?

கோலாலம்பூர் | 11/8/2021

நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாக நடத்தும்படி பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினுக்கு மாட்சிமை தாங்கிய மாமன்னர் கட்டளையிட்டார் என நம்பத் தகுந்த வட்டரம் தெரிவித்ததாக மலேசியகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை அரண்மனையில் மாமன்னரை மகியாதீன் சந்திக்க வந்த போது அங்கு நடந்ததை அறிந்த வட்டாரம் இத்தகவலை வழங்கியதாக அச்செய்தி நிறுவமன் கூறியது.

பெயர் வெளியிட விரும்பாத உயர் பதவியில் இருக்கும் அவரின் தகவலின்படி, நாடாளுமன்றக் கூட்டம் விரைவுப் படுத்தப்பட வேண்டும் என மாமன்னரால் ஆணையிடப்பட்டதாகவும் ஆனால், குறிப்பிட்ட எந்தத் திகதியையும் அவர் கூறவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் 6 ஆம் தேதிக்குள் நடத்தப்பட இருக்கும் நாடாளுமன்றக் கூட்டம் மாமன்னர் இவ்வாண்டில் தொடக்கி வைக்க இருக்கும் முதல் அமர்வு ஆகும். அந்த தேதிக்கு முன்னதாகவே நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

மேலும், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 43(4) பிரதமர் மகியாதீன் முகம்மது யாசின் தமக்குப் பெரும்பான்மை இருப்பதை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்த வேண்ட்ம் எனவும் அவரை மாமன்னர் நினைவுப் படுத்தினார்.

spot_img

latest articles

explore more