Homeஅரசியல்மரணிக்கும் மக்கள் ! பெரும்பான்மை முக்கியமா ? – காமாட்சி துரைராஜூ

மரணிக்கும் மக்கள் ! பெரும்பான்மை முக்கியமா ? – காமாட்சி துரைராஜூ

பெந்தோங் | 11/9/2021 :-

கோவிட்-19 தடுப்பூசி வழங்கப்படும் விழுக்காடு மிகவும் மோசமாக உள்ளது எனவும், குறிப்பாகத் தமது சட்டமன்றத் தொகுதியான பெந்தோங்கில் தடுப்பூசி போடப்படும் விழுக்காடு வரும்மதமடையச் செய்வதாக ஜசெகாவின் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூ கூறினார்.

ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மக்களின் பிரச்சனைகளை முதன்மையாக கவனிக்க வேண்டும் எனவும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் கவனத்தைக் குறைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 பகாங், சபாய் சட்டமன்ற உறுப்பினரான காமாட்சி, பெந்தோங்கிற்குத் தற்போது தேவைப்படுவது தடுப்பூசியே எனவும் அரசியல் நடவடிக்கைகள் அல்ல எனவும் தெரிவித்தார்.

சமூக நிலையிலான நோய்த்தடுப்பை அடைய இன்னும் அதிகதூரம் உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில், அரசியல்வாதிகளின் சுயநலம் தெரிகின்றது.

தற்பொழுது மிக அவசியமானது எது ? பெரும்பான்மையா ? சதா ஆட்சியை மாற்றுவதையே எதிர்க்கட்சியும் குறியாகக் கொள்ள வேண்டாம்.

தற்போது மக்களின் மரணா எண்ணிக்கை மிக மோசமாக உள்ள நிலையில் அரசாங்கத்தை மாற்றி என்ன செய்யப்போகிறோம் ? யார் இதையெல்லாம் பார்த்து கவலைப்படப்போகிறார்கள் ?

தற்போது பிரதமர் ம்மகியாதீன் தமது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் சிதறிக்கிடக்கும் எதிர்க்கட்சியினரோஅம்னோவின் மறைமுக உதவியால் ஒன்றாக இணைந்து அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

பெந்தோங்கில் 95,200 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிந்து கொண்டவர்களும் அதர்ௐஉத் தகுதியானவர்கலூம் உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை 31 வரையில் அதில் 25% மட்டுமே முழுமையானத் டடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர்.

அம்மாவட்டத்தில் 7 அரசு கிளினிக்குகள் இருக்கின்றன எனவும் நாள் ஒன்றுக்கு 200 பேருக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் என்பதால் வாரத்திற்கு 1,400 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களாக இருப்பர் எனாவு ஜ.செ.க.வைச் சேர்ந்த காமாட்சி கூறினார்.

கடந்த மாதம் முழுவதும் இரண்டாம் தடுப்பூசிக்கானக் கையிருப்பு மட்டுமே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதைச் சுட்டிக் காட்டி, ஒரு மாத காலமாக முதல் தடுப்பூசி போடப்படவில்லை எனக் கூறினார்.

இதனால், பாதிக்கப்பட்டவர்களில் சமூக நல இலாகாவில் பதிவு செய்து கொள்ளாத முதியோர் பராமரிப்பு இல்லங்களில் உள்ளவர்களும் அடங்குவர்.

கடந்த ஜூன் மாதம் தொடங்கி இதர்கானத் தீர்வை நோக்கித் தாம் பல முயர்சிகள் செய்து வந்ததாகவும் ஆனல், அவை பலனளிக்கவில்லை எனவும் காமட்சி சொன்னார்.

பெந்தோங் மாவட்டத்தில் அதிகமானோர் இன்னொருவர் உதவியால் நடமாடுகிறவர்களும் வயது முதிர்ந்தவர்களுன் இருக்கிறார்கள். எனவே, எங்களுக்கு அதிகமானத் தடுப்பூசிகள் தேவைப்படுவதாகவும் காமாட்சி தெரிவித்தார்.

நேற்று மட்டும் இவ்வட்டாரத்தில் கோவிட்-19 நேர்வுகளும் தற்போது 1.378 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் கூறிய காமாட்சி, அவ்வெண்ணிக்கை பகாங்கில் இரண்டாவது அதிகமான எண்ணிக்கை எனச் சொன்னார்.

spot_img

latest articles

explore more