Homeஅரசியல்அடுத்த ஆண்டு ஜூலைக்குள் பொதுத் தேர்தல் ! – பிரதமர்

அடுத்த ஆண்டு ஜூலைக்குள் பொதுத் தேர்தல் ! – பிரதமர்

கோலாலம்பூர் | 13/8/2021 :-

நாட்டின் 15வது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் நடத்தப்படும் என பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் உறுதியளித்துள்ளார்.

தேசியக் கூட்டணி மீதும் பிரதமர் மீதும் நம்பிக்கையின்மை மேலோங்கிய பிறகு அந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அதிகாரத்தில் நிலைத்திருக்கத் தாம் எண்ணியதில்லை எனவும் தங்களை ஆட்சி செய்யும் அரசாஙகத்தை மக்கள் முடிவு செய்யும் உரிமையை உகந்த நேரத்தில் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

எனவே, பெருந்தொற்றுச் சூழ்நிலையை  அடிப்படையாகக் கொண்டு அடுத்தப் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அவர் இன்று நேரலையில் உரையாற்றும்போது கூறினார்.

அதே உரையில், அடுத்த மாதம் நடைபெறுவதாகத் திட்டமிடப்பட்டுள்ள பிரதமர் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை அங்கீகரிக்க இதரக் கட்சிகளுடன் தேசியக் கூட்டணி கலந்தாலோசிக்கும் என பிரதமர் தெரிவித்தார்.

இதன் வழி தற்போதைய அரசாங்கம் தொடர்ந்து செயல்படவும் கோவிட்-19 பெருந்தொற்ரை நிர்வகிக்கவும் உகந்த நேரத்தில் பொதுத் தேர்தல் நடத்தவும் வழி செய்யும் என பிரதமர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், தற்போது நிலவி  வரும் அரசியல் நெருக்கடியில் சூழ்ச்சிக்காரர்களை ஆட்சி செய்ய அனுமதிக்க விடக் கூடாது என்பதே தமது எண்ணம் என பிரதமர் சொன்னார்.

spot_img

latest articles

explore more