தஞ்சோங் ரம்புத்தான் | 14/8/2021 :-
கோவிட்-19 நோயாளியைறாழைத்து வரச் சென்ற ஆன்புலன்ஸ் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் தடம் புரண்டு எதிர் திசை சாலையில் புகுந்து அதற்கு அடுத்துள்ள கால்வாயில் விழுந்தது.
இது குறித்து தகவல் அளித்த பேரா மாநில சாலைப் போக்குவரத்து செயலாக்கம் – விசாரணாஇப் பிரிவு இயக்குநர் அஸிஸான் ஹசான், தஞ்சோங் ரம்புத்தான் அரசு கிளினிக்கைச் சேர்ந்த ஆம்புலன்சில் ஓட்டுநர் சாஸுல்டின் (வயது 55) மருத்துவ அதிகாரி அகமாட் முஸ்தாக்கிம் படாருடின் (வயது 40) இருந்ததாகவும் இச்சம்பவம் குறித்து தமது தரப்புக்கு இரவு 8 மணி வாக்கில் தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.
இவ்விபத்து நேரும்போது அப்பகுதியில் மழை பெய்ந்து கொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் இருந்து சென்ற அந்த ஆம்புலன்ஸ், பத்து 8. கம்போங் மெலாயு பகுதியில் உள்ள கோவிட்-19 நோயாளியை சுங்கை சிப்புட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பயணித்துக் கொண்டிருக்கும்போது அவ்விபத்து நேர்ததாக அவர் கூறினார்.
இருப்பினும், அவ்விபத்தால் மற்றா வாகனங்களோ, பொது உடமைகளோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த மருத்துவ அதிகாரிக்கு இடுப்பில் அடிபட்டு வலியில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிக்க ஈப்போ பொது மருத்துவமனையில் இருந்து மற்றோரு ஆன்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. தொற்று நீக்கல் பணிக்குப் பிறகு விபத்துக்குள்ளான அந்த ஆம்புலன்ஸ் தஞ்சோங் ரம்புத்தான் அரசு கிளினிக்கிற்கு இழுத்துச் செல்லப்பட்டது.


