Homeஇந்தியா/ ஈழம்மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ மு. சரவணன் அவர்களின் இந்தியாவின் 75ஆவது விடுதலை நாள்...

மலேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ மு. சரவணன் அவர்களின் இந்தியாவின் 75ஆவது விடுதலை நாள் வாழ்த்துகள்

கோலாலம்பூர் | 15/8/20021 :-

இந்தியாவின் 75ஆவது விடுதலை நாளைக் கொண்டாடும் சொந்தங்களுக்கும், பந்தங்களுக்கும், தொப்புள் கொடி உறவுகளுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரப் போராளிகளும், தியாகிகளும் போராடி வாங்கிய சுதந்திரம் என்பது என்றென்றும் நன்றியுடன் பாதுகாக்க வேண்டிய ஒன்று.

1947இல் இந்தியா வாங்கிய விடுதலை, நமது விடுதலைப் போராட்டத்திற்கும் ஒரு உந்துதலாக இருந்தது என்றால் அது மிகையாகாது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் போராட்ட எண்ணங்களும், பாரதியின் விடுதலை வரிகளும், காந்திஜியின்  சுதந்திரக் கொள்கைகளும் மலேசிய வாழ் இந்தியர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றைய தேதியில் கட்டுப்பாடுகள் இன்று காற்றைச் சுவாசிக்க முடியாத சூழலில், உலகமே கொரோனாவிடமிருந்து சுதந்திரம் பெற காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியொரு சூழல் வரும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம். இந்த நிலை எதனால், மனிதனின் அலட்சியமா? இயற்கையின் சீற்றமா?

இந்தியாவிற்குத் தடையின்றி சென்று வரும் நாளை எண்ணி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். உறவுகளைக் காண முடியாமல், இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ள முடியாமல், வணிகர்கள் நேரடியாகச் சென்று தங்கள் வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் பலரும் அவதிப்படுகிறார்கள்.

விடுதலை நாளைக் கூட கட்டுப்பாடுகள் இன்றி கொண்டாட முடியாத இந்த சூழல் மாற வேண்டும்.

மீண்டும் இந்தியக் குடிமக்களுக்கும், மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும், இந்தியாவில் குடும்பங்களை விட்டுவிட்டு இங்கே வேலைக்காக வந்திருக்கும் இந்தியர்களுக்கும் விடுதலை நாள் நல்வாழ்த்துகள்.

வாழ்த்துகளுடன்,
டத்தோ ஸ்ரீ மு. சரவணன்
மலேசிய மனிதவள அமைச்சர்
மலேசிய இந்தியர் காங்கிசின் தேசியத் துணைத்தலைவர்

spot_img

latest articles

explore more