கோலாலம்பூர் | 15/8/2021 :-
அரசியல் தலைவர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெறுவதை அறிந்த ஊடகவியலாளர்கள் தலைநகரில் இருக்கும் தங்கும் விடுதியின் வளாகத்தில் திரண்டனர்.
மாலை 4.15 மணி அளவில் ஒரு சில அரசியல் தலைவர்கள் அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், எத்தனை பேர் அந்தச் சந்திப்புக் கூட்டத்திற்கு வந்துள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.
முன்னதாக, பிற்பகல் 2.45 மணியளவில் துணைப் பிரதமரும் அம்னோவின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அங்கு வந்ததாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
அவரைத் தொடர்ந்து, தேசியக் கூட்டணியின் பொதுச் செயலாளரும் பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் அத்தங்கும் விடுதிக்கு வந்தார்.
துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரியை அடுத்தப் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஆதரவுக் கடிதங்கள் பெரும் படலம் தற்பொழுது அரங்கேறி வருகிறது என The Vibes செய்தி வெளியிட்டிருந்தது.
அதே செய்தியில் லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் ஹம்ஸாவைத் துணைப் பிரதமராகவும் பரிந்துரைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு அடுத்தப் பிரதமர் பதவியை வழங்குவது மிகப்பெரியத் தொல்வியைக் காட்டுகிறது.
அதே வேளையில், புதிய துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டாலும் தற்போதைய உள்துறை அமைச்சர் பதவியிலும் அவர் நீடிப்பார் என The Vibes கூறியது.
இதனிடையே, நாளை மாமன்னரைச் சந்திக்கவிருக்கும் மகியாதீன், அடுத்தப் பிரதமர் பதவிக்ககா இருவரைப் பரிந்துரைக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்ததாக The Malaysian Insight குறிப்பிட்டது.
அதன்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன், டத்தோ ஶ்ரீ இஸ்ஆயில் சப்ரி ன் யாக்கோப் ஆகியோரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அது கூறியது.
இருந்த போதிலும், பெர்சத்துவின் முக்கியத் தலைவர்கல் பலர் அப்பரிந்துரைக்கு ஆதரவி வழங்கவில்லை எனவும் பெர்சத்துவே அவ்விரு தலைமைப் பொறுப்புகளை வகிக்க வேண்டும் எனவும் அவர்கள் எண்ணம் கொண்டிருப்பதாக அந்த நம்பத்தகுந்த நபர் கூறியதாக The Malaysian Insight க்குத் தகவல் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


