மலேசியவின் 8ஆவது பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் யாசின் தமது பதவி விலகல் கடித்ததை பேரரசரிடன் இன்று மதியம் ஒப்படைத்தார். இந்நிலையில் அவர் பிரதமரக மக்கள் முன் உரையாற்றினார். அந்த உரை பின்வருமாறு
மாமன்னரை சந்தித்தேன். அந்த சந்திப்பில் எனது பதவி விலகல் கடித்ததையும் அமைச்சரவை விலகல் கடிதததையும் வழங்கினேன். இதன் காரணமாக மொத்த அமைச்சரவையும் விலகியுள்ளது
இந்த அரசாங்கம் நிலைக்க கடுமையாக முயற்சித்தேன். மக்களின் நலனை முன்னிறுத்தினேன். ஆனால் அது பயனளிக்கவில்லை. ஒரு தரப்பினர் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கின்றார்கள்.
6 ஆண்டுகளுக்கு முன்பு, துணைப் பிரதமர் பதவிலிருந்து நீக்கப்பட்டேன். 1 எமடிபி குறித்து கேள்வி எழுப்பியதால் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.. ஆனால் கடவுளின் அருளால் மக்களுக்கு சேவையாற்ற மீண்டும் வாய்ப்பு கிடைத்தது.
பிரதமாரக இதுவே என் கடைசி நாள். மலேசிய அரசியல் வரலாற்றில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பொறுப்பேற்று கடமையாற்றினேன். நான் எந்த விவகாரத்திலும் சம்பந்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகளில் நுழையவில்லை.
நான் சேவை செய்த காலத்தில் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும். உங்களுக்காகவே கடுமையாக உழைத்தோம். ஆனால் இந்த காலகட்டத்தில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்
புதிய அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். அதில் எந்த சிக்கலும் வர கூடாது. 2 மாதங்கள் அனைத்தும் சரியாக நடந்தால், அக்டோபர் மாத இறுதியில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம். இதனால் மக்களின் வாழ்வாதாரத்தை மறு மலர்ச்சி காணும்.
இத்தருணத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் தடைகள் இருக்கக்கூடாது. அது தொடர வேண்டும். எனது அரசாங்கம் மக்களுக்கு தேவையான தடுப்பூசிகளை தருவித்துள்ளது. புதிய் அரசாங்கம் அதனை தொடர்ந்து செயல்படுத்துவதை ஆவணச் செய்ய வேண்டும்
நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன். நீங்களும் அப்படித்தான் நினைக்கின்றீர்கள் என நாம் ந்மபுகிறேன். இத்தருணத்தில் முனை முகப் பணியாளர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கோவிட் தாக்கத்திலிருந்து நம்மை காப்பாற்ற அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். அரசு பணியாளர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து அமைச்சர்களுக்கும் உயர்மட்ட தலைவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இது பெருந்தொற்று காலகட்டத்தில் உழைத்த அனைவருக்கும் இந்த வாழ்த்து பொருந்தும்.
தொடர்ந்து உங்களுக்காக உழைப்பேன். உங்களோடு இருப்பேன். இவ்வாறு பிரதமர் தான்ஶ்ரீ முகிடின் பேசினார்


