கோலாலம்பூர் | 16/8/2021 :-
நாட்டின் அரசியல் சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை முன்னிட்டு சில கட்சிகள் தனித்தனியே சிறப்பு சந்திப்புக் கூட்டத்தை இன்று நடத்தி வருகின்றன.
பாசிர் மாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அகமாட் ஃபாதில் சாரி இது குறித்து தெரிவிக்கயில், பாஸ் கட்சியின் முக்கிய நிகராளிகள் அவ்வாறானக் கூட்டத்தை நடத்துவதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையே, அக்கட்சியின் மற்றொரு உறுப்பினரும் தும்பாட் நாடாளுமன்ற உறுப்பினருமான சே அப்த்துல்லா மாட் நாவி தெரிவித்துள்ளாட். கோவிட்-19 சுயத் தனிமைப்படுத்தலை அவர் மேற்கொண்டிருப்பதால் அக்கூட்டத்தில் இணைந்து கொள்ள முடியவில்லை என அவர் கூறினார்.
இதனிடையே. இன்று மாலை அம்னோவும் அவ்வாற ஒரு சந்திப்புக் கூட்டத்தை புத்ரா உலக வானிப மையத்தில் நடத்துவதாகவும் கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து அதில் பேசுவதாகவும் அம்னோவின் அரசியல் பிரிவுத் தரப்பு தெரிவித்துள்ளது.
மற்றொரு நிலவரத்தில், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பெர்சத்துவும் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவிதார்.
இயங்கலையில் நடந்து வருவதாகக் கூறப்படும் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் துணைத் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமு அதன் முடிவை அறிவிப்பார் என வான் சைஃபுல் கூறினார்.


