கோலாலம்பூர் | 16/8/2021 :-
கூட்டரசுப் பிரதேச அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அன்னுவார் மூசா தற்போது Wilayah Prihatin (PriVo) திட்டத்தின் தொண்டூழியராகத் தமது சேவையைச் செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டரசுப் பிரதேச அமைசசின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள அந்தத் திட்டத்தின் தொண்டூழியராகத் தம்மைப் பதிந்து கொண்ட அடையாள அட்டையைத் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கெத்தெரே நாடாளுமன்ற உறுப்பினரான அன்னுவார் மூசா, இதுவரை தமக்கு வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளும் இரவல் என்கிறார்.
இனி, காவல்துறை அணிவகுப்பு இல்லை, தனிப்பட்ட பாதுகாவலர் இல்லை, ஊதியம் இல்லை எனக் குறிப்பிட்டவர், இனி தாம் ஒரு சராசரி குடிமகன் என்கிறார்.
Prihatin தொண்டூழியராகத் தம்மைப் பதிந்து கொண்ட அவர், இனி ஏழை எளியோர், ஆதரவற்றோர், உதவிகள் தேவைப்படுவோர் ஆகியோருக்குத் தொடர்ந்து உதவப்போவதாகத் தெரிவித்தார்,


