Homeமலேசியாநாட்டின் பாதுகாப்பும் பொது அமைதியும் கட்டுப்பாட்டில் உள்ளது ! – அரச மலேசியக் காவல்துறைத் தலைவர்

நாட்டின் பாதுகாப்பும் பொது அமைதியும் கட்டுப்பாட்டில் உள்ளது ! – அரச மலேசியக் காவல்துறைத் தலைவர்

கோலாலம்பூர் | 16/8/2021 :-

தற்போதைய நிலையில்லாத அரசியல் சூழலைத் தொடர்ந்து நாட்டின் பொது அமைதியும் பாதுகாப்பும் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார்.

எனவே, பொது மக்கள் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் எந்தவிதமான வதந்திகளையும் பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், காவல்துறை தனது கண்காணிப்பையும் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போருக்கு எதிராக காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

அதே வேளையில், பொதுமக்கள் தேசியப் பாதுகாப்பு மன்றம் வெளியிட்டுள்ள கோவிட்-19 பரவலைத் தடுக்கும் எஸ்.ஓ.பி.களை முறையாகக் கடைபிக்கப் வேண்டும் எனவும் காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

spot_img

latest articles

explore more