பெட்டாலிங் ஜெயா , அக்.12-
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் ‘ஜோம் ஷோப்பிங் ‘ தீபாவளி பற்றுச் சீட்டுகள் புக்கிட் காசிங்் வட்டார இந்தியர்களுக்கு நேற்று விநியோகிக்கப்பட்டன.
இங்குள்ள என்எஸ்கே 3 டாமான்சாரா பேரங்காடியில் நடைபெற்ற தீபாவளி ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சியில் 350 இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி மாநில அரசாங்கத்தின் 200 வெள்ளி மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.
அத்தியாவசிய பொருட்களோடு தீபாவளி பலகார பொருட்களை வாங்குவதற்கும் இந்தப் பற்றுச் சீட்டுகளை இவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
தங்களின் நிதி சுமையைக் குறைப்பதற்காக மாநில அரசாங்கம் வழங்கியிருக்கும் இந்த பற்றுச் சீட்டுகள் இத்தருணத்தில் தங்களுக்குப் பேருதவியாக இருந்ததாக இவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் மனநிறைவு கொண்டனர்.
இதற்காக மாநில அரசாங்கத்திற்கும் புக்கிட் காசிங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரஜீவ் ரிஷாகரனுக்கும் இவர்கள் மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.