கோலாலம்பூர், மே 29-

பதவியிலிருந்து விலகினாலும் இது வரை தாங்கள் கட்டிக் காத்துவந்த கட்சிக்கு என்றென்றும் விசுவாசமாக இருப்பதோடு அதற்கு எந்நாளும் துரோகம் இழைக்க மாட்டோம் என்றும் டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லியும் நஸ்மி நிக் அமாட்டும் உறுதி கூறியிருக்கின்றனர்.

“அரசாங்க பதவியில் இருந்து நாங்கள் விலகினாலும் கட்சிக்கு ஒருபோதும் துரோகம் இழைக்க மாட்டோம் “என்றார் நஸ்மி நிக் மாட்.

பிகேஆர் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்ள 11 பேர் முன் வந்துள்ளதாக வதந்தி ஒன்று உலா வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரபிஸி ரம்லி பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்து ஜூன் 17ஆம் தேதியும் நஸ்மி நிக் அமாட் இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பதவியில் இருந்து ஜூலை 4ஆம் தேதியும் விலகப்போவதாக அறிவித்திருந்தனர்.

கட்சியில் செல்வாக்கு இழந்த காரணத்தினால் தாங்கள் பதவியிலிருந்து விலகப் போவதாக அவர்கள்  கூறியுள்ளனர்.