கோத்தாகினபாலு, மே 30-வரும் சபா மாநில தேர்தலில் கூட்டணி சேர்வது குறித்து பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணி மற்றும் காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்) தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.
கோத்தாகினபாலுவில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் பெர்னாமாவிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இம்மாநிலம் மற்றும் இதன் மக்களின் நலன் காக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே நெருக்கமான உறவு பேணப்பட வேண்டும் என்றார் அன்வார்.