கோலாலம்பூர், ஜூலை 17-

தலைமையாசிரியர்களின் பதவி நிலை – கிரேட் தொடர்பான பிரச்சினைகள் கல்வி அமைச்சின் கவனத்தில் உள்ளதாகவும், சிறந்த முறையில் அதற்கு தீர்க்கப்படுவதாகவும் அதன் அமைச்சர் ஃபாட்ஹ்லினா சிடேக் தெரிவித்தார்.

கோத்தா கினபாலுவில் நடந்த மலேசிய தலைமையாசிரியர்கள் சங்கம் – PGBM நிகழ்ச்சியில் பேசியபோது தாம் அதனை தெரிவித்திருந்ததாக,  அவர் பேஸ்புக் பதிவில் கூறினார்.

பள்ளி சீர்திருத்தங்களை தலைமையாசிரியர்கள் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய ஃபாட்ஹ்லினா, PGBM-இன் பங்கு கல்வி முறையில் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார்.

தலைமையாசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் உறுதியளித்த அவர், அச்சங்கத்தின் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் மேலதிக விவாதங்களுக்கு தமது அலுவலகத்திற்கு வரும்படியும் ஃபாட்ஹ்லினா அழைப்பு விடுத்தார்.