தற்போது கம்போடியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட பின்னர், அந்நாடு தாய்லாந்து மீது ஏவுகணையைப் பாய்ச்சி சேதத்தை உருவாக்கியது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகக் கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்த மோதலைக் கட்டுப்படுத்தாமல் போனால் அது அண்டை நாடுகளான மற்ற ஆசியான் நாடுகளுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எனவே, இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் அவ்விரு நாடுகளும் மேலும் சண்டையை விரிவு படுத்தாமல் சமாதானத்தைக் கடைபிடிக்க ஆசியான் தலைவரான பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென சார்ல்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.

அவ்விரு நாடுகளும் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு இணங்கி, முழுமையான மோதலை நிறுத்த ஒத்துழைக்க வேண்டுமென்றும் அதுவே ஆசியானின் பரஸ்பர கொள்கையைக் கடைபிடிக்கும் உடன்பாடு என்றும் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

-பொன் முனியாண்டி