கோலாலம்பூர், ஜூலை 26-
எதிர்க்கட்சிகளால் இன்று நடத்தப்பட்ட ‘அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணி’ மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார சிரமங்களை எடுத்துரைக்கவே என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைமைச் செயலாளர் முகமட் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.
பேரணி விவகாரம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் சபா மாநிலத் தேர்தல், ஒருங்கிணைந்த எதிர்க்கட்சிகளின் கூட்டணி, அன்வாருக்கு எதிரான பேரணி, நடப்பு தேசியப் பிரச்சினைகள், நாட்டின் அரசியல் நிலைத் தன்மை, நீதிமன்றங்களின் சுதந்திரம், மக்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவினம் போன்றவையும் விரிவாக விவாதிக்கப்பட்டதாகவும் அஸ்மின் அலி கூறினார்.
-பொன் முனியாண்டி