கோலாலம்பூர், ஜூலை 26-
தலைநகர் டத்தாரான் மெர்டேக்காவில் நடைபெற்ற ‘அன்வார் பதவி விலக வேண்டுமென்ற பேரணியில்’ 5 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாக பாஸ் கட்சித் தலைவர்கள் மிகைப்படுத்தி கூறியிருப்பது பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
அது பற்றிக் குறிப்பிட்ட பாங்கி நாடாளுமன்ற ஜசெக உறுப்பினர் ஷாஹ்ரெட்ஸான் ஜோகான், பாஸ் கட்சியின் எண்ணிக்கை இட்டுக் கட்டியது என்றும் உண்மையில் பேரணியில் கலந்து கொண்டோர் 18முதல் 20 ஆயிரம் பேர் வரைதான் என்று குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியின் கூற்று தாங்கள் நடத்திய பேரணியின் பிரம்மாண்டத்தை உண்மைக்கு மாறாகக் காட்டி, மக்களின் ஆதரவைத் திரட்டும் தந்திரம் என்றும் அவர் சாடினார்.
பேரணியில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் எதற்காகப் பேரணி நடத்தப்பட்டது என்பதுதான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-பொன் முனியாண்டி