பெட்டாலிங் ஜெயா, ஜூலை 28-

சபா மாநில தேர்தலுக்கான பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணிக்கு இடையிலான தொகுதி பங்கீடு மீதான பேச்சு வார்த்தை ஒரு முடிவுக்கு வந்திருப்பதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.

இத்தேர்தலில் இக்கூட்டணி ஒன்றிணைந்து களம் இறங்கும் என்றார் அவர்.

“சபா தேர்தலை எதிர்நோக்க எந்தக் கட்சியுடனும் கூட்டு சேர்வதை பிகேஆர் வரவேற்கிறது” என்றார் ஃபுசியா.

எனினும், இத்தேர்தலில் ஒவ்வொரு கூட்டணியும் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை.