கோலாலம்பூர், ஜூலை 30-

அன்வாரை பதவியிலிருந்து அகற்றுவதற்காக கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பேரணியில் துன் மகாதீர் உரையாற்றி எப்பாடு பட்டாகிலும் பிரதமர் பதவியிலிருந்து அன்வாரை அகற்ற வெண்டுமென வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது.

எப்படித்தான் குட்டிக் கரணம் போட்டாலும் அன்வாரை ஜனநாயகத்திற்கு முரணாகப் பதவியிலிருந்து அகற்ற முடியாது என்பதை மகாதீர் தெரிந்தே வைத்திருப்பதால் மக்களின் இன, சமய பேதங்களை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி தமது காரியத்தை நிறைவேற்ற உறுதி கொண்டு அதீத முயற்சியை எடுத்து வருவது வெள்ளிடைமலை.

தமது பதவி காலத்தில் ஓரின புணர்ச்சி வழக்கை புனைந்து, அன்வாரை கட்சியிலிருந்தும் துணைப் பிரதமர் பதவியிலிருந்தும் திட்டமிட்டு மகாதீர் வெளியேற்றியது மறக்க முடியாத நிகழ்ச்சிகளாகும்.

இந்நிலையில், அன்வாரின் துணைப் பிரதமர் காலத்தில் தமது குடும்பத்தையும் கட்சியில் தமது பதவியையும் விமர்சித்த அன்வாரை தீர்த்து ஒழிக்கவே மகாதீர் முயன்றதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஸர்க்காசி சுட்டிக் காட்டியுள்ளார்.

-பொன் முனியாண்டி