கோலாலம்பூர், ஜூலை 31-

இன்று 13ஆவது மலேசிய திட்டத்தை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் வாசித்த பின்னர், அன்வார் பதவியில் நீடிக்க வேண்டுமென முழக்கம் வானாளவ முழங்கப்பட்டது.

 இரண்டரை மணி நேரம் அத்திட்டத்தை அன்வார் வாசித்து அமர்ந்த பின்னர், உலு லங்காட் எம்பி சானி ஹம்ஸா ‘அன்வார் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டுமென முழங்கிய பின்னர், அரசு ஆதரவு எம்பிக்களும் ஒருசேர ஒரே குரலில் அதனை வழிமொழிந்து முழங்கி பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியதோடு எம்பிக்கள் மேசையைத் தட்டி, தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

 அச்சமயத்தில் சபையை வழிநடத்திய துணை சபாநாயகர் எலிஸ் லாவ், உடனடியாக சபையின் ஒலிபெருக்கிக் கருவியை முடக்கி, சபையில் தேவையற்ற அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுத்தார்.