ஷா ஆலம், ஆக. 8-
நீண்ட காலம் சிலாங்கூரில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருந்த அம்னோ, 2008இல் பக்காத்தானிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
தற்போது சுங்கை ஆயர் தாவார் மற்றும் டூசுன் துவா ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே வைத்திருக்கும் அம்னோ, அடுத்த பொதுத்தேர்தலில் கூடுதல் இடங்களைக் கைப்பற்ற கடும் சோதனைகளை எதிர்நோக்கும் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் இரண்டு தேர்தல்களுக்குப் பின்னர் கூடுதல் இடங்களை வெல்வதோடு மக்கள் மற்றும் பிகேஆரின் ஆதரவோடு அம்னோ மீண்டும் சிலாங்கூரை கைப்பற்ற இயலும் என்றும் கருத்துரைத்துள்ளார்.
-பொன் முனியாண்டி