கோலாலம்பூர், ஆக.19-
நாட்டின் அரசமைப்பு விதிகளுக்கு அரசியல்வாதிகளே அச்சுறுத்தலாக இருப்பதாக சட்டத்துறை மீதான கருத்தரங்கில் உரையாற்றிய முன்னாள் கூட்டரசு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தெரிவித்தார்.
நீதித் துறை நியமனங்கள் தாமதமாவதற்கு அதற்கான நடைமுறை சிக்கல் இருப்பதால்தான் என்றும் அது பற்றி அரசைக் குறை கூறக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தமது பதவி காலத்தில் தீர்ப்புகளில் அரசியல் தலையீடு எதனையும் தாம் சந்தித்ததில்லை என்றும் நீதிபதிகளுக்கு சமயம், இனம் போன்ற நெருக்குதல் எதுவும் நேர்மையான நீதியை வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தியதில்லை என்றும் தெங்கு மைமுன் குறிப்பிட்டார்.
-பொன் முனியாண்டி