கோலாலம்பூர், ஆக. 30-

செப்டம்பர் 1 இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202சீசன் 2-இன் முதல் ஒளிபரப்புடன் மகரந்தம் எனும் பிரபலக் காதல் தொடரின் மறுபிரவேசத்தை அறிவிப்பதில் மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ மகிழ்ச்சி அடைகிறது.

இந்தத் தொடர் டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கிடைக்கப் பெறும்.

மதன் மற்றும் சுசீலாவின் திருமண வாழ்க்கையின் சவால்கள், மனவேதனைகள் மற்றும் தவறான புரிதல்களால் சூழப்பட்ட உணர்ச்சிப் பயணத்தை மகரந்தம் தொடரின் இரண்டாம் சீசன், ஆராய்கிறது.

பல வருட தேடலுக்குப் பிறகு, மதன், சுசீலாவை அவளது முன்னாள் கணவர் சந்துரு மற்றும் ஒரு சிறுமி யாழினியுடன் காணும்போது, ​​அவர்களின் நல்லிணக்கத்திற்கான பாதை தொடங்குகிறது.

சுசீலாவும் சந்துருவும் மீண்டும் இணைந்துவிட்டார்களா என்ற கேள்விக்குறிக்குள்ளான மதன், சந்துருவிடமிருந்து இடைவெளியைக் கடைபிடிக்கும் சுசீலாவின் நடத்தையைக் கவனித்தப் பிறகுச் சந்தேகிக்கிறான்.

யாழினி மற்றும் சுசீலாவின் நம்பிக்கையை வெல்லும் எதிர்பார்பில், அவன் படிப்படியாக யாழினியுடன் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் யாழினியின் பாசம் இழந்துவிடுமோ என்ற பயத்தில் சந்துரு அவளைக் கடத்தும்போது ​​பதட்டங்கள் உச்சத்தை அடைகின்றன.

ஆபத்து நெருங்கி வருவதால், மதனும் சுசீலாவும் தங்கள் கடந்த காலத்தை எதிர்கொண்டு யாழினியைக் காப்பாற்ற ஒன்றுபட வேண்டும். அன்பை மீண்டும் தூண்டிக் குடும்ப உறவுகளை மீட்டெடுக்க வேண்டும்.

தினேஷ் சாரதி கிருஷ்ணன் இயக்கிய மகரந்தம் சீசன் 2 பால கணபதி வில்லியம், சாந்தினி கோர், தாஷா கிருஷ்ணகுமார், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி உட்பட பல பிரபலமான நடிகர்கள் வரிசையைக் கொண்டுள்ளது.

மகரந்தம் சீசன் 2-இன் புதிய அத்தியாயங்களை திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் கண்டு களிக்க. டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு இரசியுங்கள்.

உங்கள் ஞாயிறு பத்திரிகை நிகழ்ச்சி – சஞ்சிகை ஆஸ்ட்ரோ விண்மீனில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-இல் ஒளிபரப்பாகும் சஞ்சிகை எனும் துடிப்பான புதிய பத்திரிகை நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா வழியாக மலேசியர்கள் இப்போது கண்டு களிக்கலாம். இந்த நிகழ்ச்சியில் திவாகரன் மற்றும் ஷாந்தினி தொகுப்பாளர்களாக அறிமுகமாகின்றனர்.

சஞ்சிகை நான்கு ஈர்க்கக்கூடிய பிரிவுகள் மூலம் புதிய கண்ணோட்டங்களை வழங்குகிறது:

வீக்-லெப் பீக் – வெற்றிக் கதைகள், விளையாட்டுப், பொழுதுபோக்குத், திரையரங்க வெளியீடுகள், கோலிவுட் புதுப்பிப்புகள் போன்றப் பொது மக்கள் ஆர்வத்தைத் தூண்டும் பிரபலமான தலைப்புகளை விவரிக்கிறது.

ஸ்டார்-எ-யாரு – பிரபலமான உள்ளூர் மற்றும் சர்வதேசப் பிரபலங்களின் நேர்காணல்களைச் சித்தரிக்கிறது.

இது நம்பக் கதை – மலேசியாவின் தனித்துவமான கதைகள், கலாச்சாரம், மற்றும் பாரம்பரியத்தை மையப்படுத்துகிறது.

யாதும் ஊரே – கலாச்சார விழாக்கள் முதல் உணவுக் கண்காட்சிகள், படைப்புப் பட்டறைகள், நடன நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றின் தற்போதைய நிகழ்வுகளை முன்னிலைப்படுத்துகிறது.

இந்தப் பத்திரிகை நிகழ்ச்சியில் மலேசியர்கள் தங்கள் சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் முன்னிலைப்படுத்தலாம். தங்களின் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை மூன்று மாதங்களுக்கு முன்பே ஆஸ்ட்ரோ உலகம் வலைத்தளத்தில் கிடைக்கப்பெறும் சமர்ப்பிப்புப் படிவத்தின் மூலம் அவர்கள் சமர்ப்பிக்கலாம்.

ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99*-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99* கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பலாம் .

மேல் விபரங்களுக்கு www.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.