பெட்டாலிங் ஜெயா, செப். 9-
மலேசிய இந்திய டிஜே கலைஞர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக மாபெரும்” பீட் தலைவன்” எனும் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
இந்நாட்டில் திறமைமிக்க இந்திய டிஜே கலைஞர்கள் அதிகளவில் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் இத்துறையில் சாதிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.
இவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் பொருட்டு தேசிய அளவிலான பீட் தலைவன் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் .
இப்போட்டியை செந்தோசா சட்டமன்ற தொகுதி, அஜெண்டா சூரியா, ரியல் ஜோக்கி, திரினித்தி சொலுஷன் நிறுவனம் மற்றும் செஜாத்ரா செந்தோசா சிலாங்கூர் அமைப்பு ஆகியவை கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்திருப்பதாக அவர் விவரித்தார்.
சுமார் 50 போட்டியாளர்கள் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பரிசுகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார் .
நாளை 10ஆம் தேதி தொடங்கும் இப்போட்டிக்கான பதிவு 23ஆம் தேதி முடிவடையும்.
முதல் கட்ட தேர்வு இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறும் வேளையில் அரையிறுதி சுற்று அடுத்த மாதம் 5ஆம் தேதி நடைபெறும்.
இப்போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று 15ஆம் தேதி புக்கிட் ஜாலில் அரங்க வளாகத்தில் நடைபெறும்.
இசைத்துறையில் இந்திய இளைஞர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் மற்றும் வருமானத்தை ஏற்படுத்தித் தர இப்போட்டி நடத்தப்படுகிறது.
ஆர்வமுள்ள டிஜே கலைஞர்கள் இதில் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
மேல் விவரங்களுக்கு 012-5803605 (மணி போய்), 017-3149462 (ஹார்டி பி) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.