கோலாலம்பூர்:

மலேசியாவின் லிட்டல் இந்தியா லெபோங் அம்பாங் என்றும் அதனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் மனு வழங்கப்படும் என்றும் லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் தெரிவித்தார்.

16-ஆம் ஆண்டாக ஏற்பாட்டு செய்யப்பட்டுள்ள பிரதமருடன் தீபாவளி விழாவில் இம்முறை பிரதமர் அன்வார் கலந்து கொள்ளவார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தகர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் 16-ஆம் ஆண்டு பிரதமருடன் தீபாவளி விழா அக்டோபர் 11-ஆம் தேதி கோலாலம்பூர் லெபோ அம்பாஙில் நடைபெற உள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சி மதியம் 2 மணி முதல் இரவு 11.59 வரை நடைபெறவுள்ளது.

பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்கசர் டத்தோஸ்ரீ ஜலிஹா முஸ்தாஃப்பா, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா துணை தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளவுள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் தெரிவித்தார்.

மாலை 2 மணி முதல் 6 மணி வரை மின்னல் எஃபெம் அறிவிப்பாளர்களுடன் போட்டி, விளையாட்டுகள் நடைபெறும்.

இரவு 7 மணிக்கு மேல் மலேசிய கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

பொதுமக்களுக்கு உணவு வழங்கப்படும். மேலும், 300 பரிசுக் கூடைகள் வழங்கப்பட உள்ளன. ஐந்து பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படுவதாக லோகநாதன் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அக்டோபர் 10-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் நள்ளிரவு வரை லெபோ அம்பாங் சாலை மூடப்படும்.

எனவே பொதுமக்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு லோகநாதன் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.