ஷா ஆலம்:
தீபாவளி பெருநாளை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தில் வேலை செய்யும் இந்திய தூய்மை பணியாளர்களுக்கு உணவு கூடை, பண அன்பளிப்புகளை அம்மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வழங்கினார்.
இன்று காலை சிலாங்கூர் மாநில அரசு செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 25 பணியாளர்கள் உணவு கூடைகளையும் பண அன்பளிப்பையும் பெற்றுக் கொண்டனர்.
மாநில அரசின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக சிறப்பான திட்டம் என்றும் இதுபோன்ற உதவிகள் தங்களின் சுமையை ஓரளவு குறைப்பதாகவும் உணவு கூடைகளையும் பண அன்பளிப்பையும் பெற்றுக் கொண்ட இந்திய தூய்மை பணியாளர்கள் கூறினர்.
அதுமட்டுமில்லாமல், இந்த உணவு கூடைகளை வழங்கிய வீ.பாப்பாராய்டு மற்றும் அவரின் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து கொண்டனர்.