கோத்தா டாமன்சாரா:

மடானி விற்பனை சந்தை கூட்டுறவுச் சங்கங்கள், சிறு தொழில்முனைவோர் மற்றும் சமூகத்தினரிடையே நல்லுறவை வலுப்படுத்துவதாகத் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் தெரிவித்தார்.

இன்று கோத்தா டாமான்சாராவில் நடைபெற்ற கூட்டுறவு தொழில்முனைவோர் மதானி விற்பனை சந்தையைத் துணையமைச்சர் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

சுங்கை பூலோ மக்களின் நலனுக்காக சுமார் RM 205,966 லட்சம் ரிங்கிட் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து டத்தோஸ்ரீ ரமணன் இந்த விற்பனை திட்டத்திற்காக நிதி வழங்கியுள்ளார்.

இன்றைய விற்பனை சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு 50 % வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்முனைவர் மற்றும் கூட்டுறவு வளர்ச்சி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மலேசிய கூட்டுறவு ஆணையம் (SKM) – சிலாங்கூர் கிளையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

மேலும், இந்நிகழ்ச்சியில் தீபாவளி பெருநாளைக் கொண்டாடவுள்ள வசதி குறைந்த இந்திய குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்களையும் சிறுவர்களுக்குப் பண அன்பளிப்பையும் டத்தோஸ்ரீ ரமணன் வழங்கினார்.