கோலாலம்பூர்:
இன்று கொண்டாடப்படும் தீபாவளித் திருநாள் எல்லோரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி, இன்பங்களும் மகிழ்ச்சியும் நிறைந்து, வளமும் செழிப்பும் பெருகும் இனிய நன்னாளாக அமைய வேண்டும் என்றார் பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் ஓங் சுன் வேய்.
பல இன மக்கள் ஒன்றிணைந்து வாழும் இந்நாட்டில், கொண்டாட்டங்கள் என்பது பல்வேறு இன மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பாலமாக அமைந்துள்ளன.
இத்தகைய கொண்டாட்டங்கள் மூலம் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்கும், அவரவர் கலாசாரங்கள், பண்பாடுகள் மற்றும் பாரம்பரியங்களை மதித்து நடப்பதற்கும் சிறந்த வாய்ப்பாக அமைகின்றன என்று தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்தார்.
மேலும், இவை இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இத்தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் ஓங் சுன் வேய்.


