Homeசமூகம்மீராக்கல்ஸ் ஓன் வீல்ஸ் சாகச நிகழ்ச்சி!

மீராக்கல்ஸ் ஓன் வீல்ஸ் சாகச நிகழ்ச்சி!

கோலாலம்பூர், நவ. 17-

மலேசிய மண்ணில் முதன் முறையாக நடைபெறவிருக்கும் மீராக்கல்ஸ் ஓன் வீல்ஸ் (சாகசங்களின் எழுச்சி) முழுக்க முழுக்க மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு அரங்கேறவுள்ளது, அவர்களின் சாகச படைப்புகள் கண்களுக்கு விருந்தளிப்பதோடு, உள்ளத்தை சுண்டி இழுக்கும் விதமாக இருக்குமென மை ஸ்கில் அறவாரியத்தின் தலைவர் வழக்கறிஞர் பசுபதி கூறினார்.

இந்திய மண்ணில் பலரது பாராட்டுகளைப் பெற்று சாதனை படைத்த இந்த குழுவினரின் படைப்பு மலேசிய ரசிகர்களையும் வெகுவாகக் கவருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். மை ஸ்கில் அறவாரியம் சவால்மிக்க மாணவர்களுக்கு வழிகாட்டுவதைப் போல மாற்றுத் திறனாளி மானவர்களுக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது.

இதனிடையே மை ஸ்கில் ஏற்பாட்டில் 7 இடங்களில் இந்த சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மை ஸ்கில் மாணவர்களும் பங்கேற்கின்றார்கள். சவால்மிக்க மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டுமென 34 ஏக்கர் நிலப்பரப்பில் தொழில் திறன் பயிற்சிக் கல்லூரி கட்டப்படுகின்றது. அதற்கு நிதி திரட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 19ஆம் தேதி பட்டர்வெர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலும், நவம்பர் 20ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டரிலும், நவம்பர் 21ஆம் தேதி ஈப்போ கல்லுமலை ஆலய மணடபத்திலும், நவம்பர் 22ஆம் தேதி ரவாங் நைஸ் மாநாட்டு மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

அதேபோல் மீண்டும் நவம்பர் 24ஆம் தேதி ஜோகூர் தாமான் புக்கிட் இண்டா டேவான் ராயாவிலும், நவம்பர் 25ஆம் தேதி கோலாலம்பூர் மாநகர மன்ற மண்டபத்திலும் (டிபிகேஎல்), நவம்பர் 28ஆம் தேதி ஷாஆலம் மிட்லெண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்திலும் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பசுபதி நினைவுறுத்தினார். மேல் விவரங்களுக்கு www.myskills.org.my, முகநூல் myskills foundatin ஆகியவற்றை வலம் வரலாம். தொடர்புக்கு 012−2245514, 010−2732981, 012−3465212 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

spot_img

latest articles

explore more