ஜாசின் | பிப்பரவரி 12 :-
மலாக்கா ஜாசின் கெசாங் பாஜாக் பகுதியில் பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தை நிறுவி பிரத்தியங்கிரா உபாசகர் என்று பெயர் பெற்ற சிவஸ்ரீ தினகேஸ்வரன் குருக்கள் இன்றைய தினம் 1.30pm மணியளவில் காலமானார்.
நாடு தழுவிய நிலையில் இவர் பிரபலமானவர். பிரத்தியங்கிரா தேவி ஆலயத்தின் வாயிலாக பல்வேறு சமூகநல சேவைகளையும் ஆன்மிக சேவைகளையும் செய்து வந்தவர்.
தற்போது இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு புதிய இடத்தில் மிகச் சிறப்பான ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
நேற்று முன்தினம் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்த தாகவும் நேற்று காலை அவர் வீட்டில் உறக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரது சகோதரி உறுதிப்படுத்தினார்.


