Homeமலேசியாகனவிலும் கற்பனையிலும் மிதந்து கொண்டிருக்கும் மோகன் ஷான் எப்போது விழிப்பார் ?

கனவிலும் கற்பனையிலும் மிதந்து கொண்டிருக்கும் மோகன் ஷான் எப்போது விழிப்பார் ?

ஈப்போ | பிப்பரவரி 19

சமயத்திற்கு எதிரான, குறிப்பாக இந்து மதத்திற்கு எதிரானப் பரப்புரைகளை முறியடிக்க ஒன்றுபடுவோம் என அறிக்கை விட்ட மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் மொழி இனம் தொடர்புடைய விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம் என பேரா தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவர் புகனேசுவரன் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் மலேசிய இந்து சங்கம் வெளியிட்டு வந்துள்ள அறிக்கைகள் பல்வேறு சமயங்களைப் பின்பற்றும் மலேசியத் தமிழர்களிடையே குறிப்பிட்ட ஒரு சமயத்தை முன்னிறுத்தி பொங்கலை சமய விழா என உண்மைக்குப் புறம்பானக் கருத்தை அவ்வப்போது வலியுறுத்தி பல சமயங்களில் இருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையை குலைக்கும் பணியில் ஈடுபடுவதாகத் தெரிகிறது.

மேலும், அவ்வப்போது தம்மையும், தமது அமைப்பையும், இந்துக்களை மட்டும் குறி வைத்து நாட்டில் பல செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்தி மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்.

நமது நாட்டின் இறையாண்மைக்குப் பங்கம் விளைவிக்கும் அடிப்படையில் எந்தச் சங்கமும் தமிழ் இனம் மொழி எனும் பெயரில் நாச காரியங்களில் ஈடுபட வில்லை. அப்படி அவர் குறிப்பிட்டது போல் உண்மை என்றால், ஏன் பிற சமயங்களின் அமைப்புகள் பல காலமாக எந்தப் புகாரும் (அறிக்கை வாயிலாகக்) கொடுக்கவில்லை ?

மோகன் ஷான் குறிப்பிடுவது போல, மற்ற சமயங்களுக்கும் பங்கம் விளைவிக்கும் செயல்பாடுகள் நாட்டில் நடந்திருந்தால் கண்டிப்பாக அவர்களும் என்றோ குரல் கொடுக்கவும் தொடங்கி இருப்பார்கள்.

இவை அனைத்தும் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷானுக்கு மட்டும் நடப்பதாகத் தோன்றியிருப்பது, அவர் தனது சொந்தக் கற்பனை – கனவு உலகத்தில் வாழ்ந்து கொண்டு நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது எனத் தெரியாமலேயே அவர் விருப்பத்திற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.

தெளிந்த மன நிலைக்கு வந்து உண்மை நிலையைக் கண்டறிந்து, அவரின் அமைப்பு சார்ந்தும் இந்து சமயம் சார்ந்தும் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகளில் ஈடுபட பேரா மாநிலத் தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் அறிவுறுத்துகிறது.

மேலும், தமிழர் இனம், மொழி, பண்பாடு சார்ந்து எந்தத் தகவலும் துளி கூட அறியாமல் வெட்டிப் பேச்சு பேசி தமிழரிடயே சமயத்தைக் கருவியாகப் பயன்படுத்தி வேற்றுமையை விதைக்கும் ஈனச் செயலையும் மோகன் ஷான் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பேரா மாநிலத் தமிழர் முன்னேற்ற மேம்பாட்டுச் சங்கம் எச்சரிக்கிறது.

spot_img

latest articles

explore more