புத்ராஜெயா | 16/8/2021 :-
இன்று காலை 9.30 மணி தொடங்கி அமைச்சர்களும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளும் சிறப்பு அமைச்சவைக் கூட்டத்தில் கலந்தும்கொள்ள பெர்டானா புத்ராவுக்கு வந்தனர்.
காலை 10.00 மணிக்குத் தொடங்கும் அந்தக் கூட்டத்தை பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் தலைமையேற்பார்.
தேசிய வழக்கறிஞர் இட்ருஸ் ஹாருன், அரச மலேசியக் காவல்துறைத் தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, தேசிய அரசாங்கச் செயலாளர் முகம்மட் ஸூக்கி அலி, போர்ப்படைத் தலைவர் அஃபெண்டி ஸாலி, கல்வி அமைச்சர் ரட்ஸி ஜிடின், உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுடின், அறிவியல், தொழில்நுப்டம், புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதின், துணைப்பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி, பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்) டத்தோ ஶ்ரீ முஸ்தாப்பா முகம்மட் ஆகியோருடன் இதர அமைச்சர்களும் அங்கு வந்தனர்.
காலை 7.42 மணி அளவில் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசின் புக்கிட் டாமான்சாராவில் உள்ள தமது இல்லத்தில் இருந்து புறப்பட்டார் .
காலை 8.07 மணி அளவில் பிரதமர் தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினின் வாகனம் பெர்டானா புத்ராவுக்கு வந்தடைந்தது.
அங்கு அவர் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளைச் சந்திப்பதோடு சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்திலும் கலந்து கொள்வார்.
இன்று நண்பகலில் தமது பிரதமர் பதவியின் நிலைப்பாடு குறித்து மாமன்னரைச் சந்திப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


