கோலாலம்பூர் | 16/8/2021 :-
பிரதமர் மகியாதீன் முகம்மது யாசினின் பதவி விலகலுக்குப் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அக்கட்சியின் தகவல் பிரிவு தலைவர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவிதார்.
இயங்கலையில் நடந்து வருவதாகக் கூறப்படும் சந்திப்புக் கூட்டத்திற்குப் பிறகு அக்கட்சியின் துணைத் தலைவர் அகமாட் ஃபைஸால் அஸுமு அதன் முடிவை அறிவிப்பார் என வான் சைஃபுல் கூறினார்.


