Homeஅரசியல்மீண்டும் தேசியக் கூட்டணியில் இருந்தே புதிய பிரதமரா ? சரி வராது ! – சிவக்குமார்

மீண்டும் தேசியக் கூட்டணியில் இருந்தே புதிய பிரதமரா ? சரி வராது ! – சிவக்குமார்

பத்து காஜா | 16/8/2021 :-

தான் ஶ்ரீ மகியாதீன் முகம்மது யாசினுக்கு மாற்றாக தேசியக் கூட்டணியில் இருந்தே மீண்டும் ஒரு பிரதமர் நியமிக்கப்ப்டுவது சரி வராது எனக் கூறுகிறார் பத்து காஜா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வ. சிவக்குமார்.

தற்பொழுது தோல்வி அடைந்திருப்பது மகியாதீன் எனும் தனி மனிதர் மட்டும் அல்ல. தேசியக் கூட்டணி அமைச்சரவையின் ஒன்றினைந்த தோல்வியாகும்.

எனவே, மீண்சடும் தேசியக் கூட்டணியில் இருந்தே இன்னொருவர் பிரதமர் ஆவது சரியாக இருக்காது என சிவக்குமார் கூறினார்.

மாறாக, தேசியக் கூட்டணி முற்றிலும் ஒதுங்கி புதிய தலைமைத்துவத்திற்கு வழி விட வேண்டும் என ஜ,செ.க. கட்சியின் ஒரு தலைவரான சிவக்குமார் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more