பெர்லின், டிச, 7-

மலேசியாவின் திறன் மேம்பாட்டுக் கழகமான கேபிந்தாரின் தொழில்துறை 4.0 எனும் தொழிட்நுட்ப கருத்தரங்கு பயிற்சி பட்டறை ஜெர்மனியின் பெர்லின் அரங்கில் திங்கட்கிழமை காலை தொடங்கியது.

பெர்லினின் இ.எஸ்.எம்.டி. கல்வி கழகத்தில் நடைபெற்று வந்த இந்த பயிற்சி இன்றோடு முடிவடைகின்றது. இதில் பயிற்சி பெற்ற ஊடகவியலாளர்கள் புதன்கிழமை மாலை ஜெர்மனியின் முதன்மை நகரங்களில் ஒன்றான ஸ்டட்கர்ட் நோக்கி பயணமாகின்றனர்.

கேபிந்தாரின் முதன்மை அதிகாரியான பாலன் தலைமையில் இந்த கருத்தரங்கு சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. நாளை வியாழக்கிழமை உலகின் தலைசிறந்த கார் தயாரிப்பு நிறுவனமான போஷே தலைமையகத்தில் இவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

கார் தயாரிப்பு முறையில் தொழில்துறையின் மேம்பாடுகள் குறித்த விளக்கம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றது. பின்னர் ஜெர்மனியின் முதன்மை நகரமான பாயன் மூனீச் நோக்கி கேபிந்தார் ஊடகவியலாளர்கள் குழு பயணிக்கின்றது.

இதுவரையில் நடந்த கருத்தரங்கில் நவீன தொழில்துறை மேம்பாட்டு குறித்த விளக்கங்களும் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக இன்னும் சில ஆண்டுகளில் தொழில்நுட்பம் பல மடங்கு மேம்பாடு காணும் தருணத்தில், மனிதவளம் எவ்வாறான சவால்களை எதிர்நோக்கவிருக்கின்றது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.