சீர்காழி புகழ் இராஜ ராஜ சோழனின் பெருமை கூறும் பாடல்களில் சில…

0
15

கோலாலம்பூர், ஜூலை 25-

பழம்பெரும் பாடகரான மறைந்த சீர்காழி கோவிந்தராஜன் குரலில் பாடி மலேசியா மட்டுமின்றி இந்தியாவில் புகழ்பெற்ற இராஜ ராஜ சோழன் இன்று காலமானார். அவரது திடிர் மறைவால் மலேசிய இந்திய கலை உலகம் மட்டுமின்றி பழம்பெரும் பாடல் இரசிகர்களும் துன்ப கடலில் ஆழ்ந்துள்ளனர்.

நாட்டில் பல பகுதிகளில் தனது இசை கச்சேரி வாயிலாக மலேசிய இரசிகர்களை கவர்ந்திழுத்த அவர் இந்தியாவிலும் புகழ் பெற்று விளங்கினார். இந்தியா மற்றும் தெற்கிழக்காசிய நாடுகளுக்கான சிறப்பு கட்டமைப்பு தூதரான டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் அவரது உதவியில் இந்தியாவிற்கு சென்று முறையாக சங்கீதத்தை இராஜ ராஜ சோழன் கற்று வந்ததாக பழம்பாடல் இரசிகர்கள் அனேகன்.கோமிடம் தெரிவித்தனர். இராஜ ராஜ  சோழனும் தனது இசை கச்சேரிகளில் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை பாராட்ட தவறியதில்லை.

சீர்காழி கோவிந்தராஜன் குரலில் இராஜ ராஜ சோழனின் புகழ்களை கூறும் சில பாடல்கள் இதோ அனேகன்.கோம் வாசகர்களுக்காக இங்கே வழங்குகிறோம்.