பெட்டாலிங் ஜெயா, பிப். 8-
கண்ணாடி இல்லாத X வகை காமிராக்களின் விற்பனையின் மூலம் புஜி பிலிம் மலேசியா நிறுவனம் தனது சந்தையை விரிவுப்படுத்த இலக்குக் கொண்டுள்ளது.
ஜென் Y எனப்படும் இளம் தலைமுறையினர் மத்தியில் காமிரக்களின் மூலம் படங்களைப் எடுப்பதில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் அந்த ஆர்வத்தின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள புஜி பிலிம் மலேசியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினர் தங்களுக்குப் பிடித்த உயர்தரமான மற்றும் பல்வேறு கோணங்களில் படங்களை பிடிக்க விரும்புகின்றனர். எனவே அவர்களின் ரசனைக்கு ஏற்ற ஒரு புதிய காமிராவை புஜி பிலிம் மலேசியா அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது. X – A5 எனப்படும் அந்த புதிய காமிரா இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட X – A3 காமிராவின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் X வகை காமிராக்களில் கண்ணாடி இல்லாத மிக சிறிய வகையிலான காமிராவாக X – A5 காமிரா விளங்குகிறது. இந்த காமிரா மூலம் தொலைவில் இருக்கும் காட்சிகளையும் மிக துல்லிதமாக பதிவு செய்ய முடியும். அதேவேளையில் நடப்பில் இருக்கும் புதிய தொழில்நுட்ப வசதிகளையும து கொன்டுள்ளது.
4K தரத்தில் வீடியோக்களைப் பதிவு செய்யும் ஆற்றலையும் இந்த காமிரா கொண்டுள்ளது. 495 கிராம் எடை மட்டுமே கொண்ட இந்த காமிரா புகைப்பட விரும்பிகள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என புஜி பிலிம் மலேசியாவின் தலைமை இயக்குனர் யோஷித்தா நக்கமூரா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய காமிராவின் மூலம் புஜி பிலிம் மலேசியாவின் விற்பனை மேலும் 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை பாரா ஆன் அப்துல் ஹடி X – A5 கேமிராவின் அதிகாரபூர்வ தூதராக செயல்படுவார் என்றும் புஜி பிலிம் மலேசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

