சென்னை, ஜூலை.26 –
“என்றென்றும் புன்னகை “, ” மனிதன் ” படங்களை இயக்குனர் ஐ.அஹ்மேட் அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும் இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கூடும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு முன்னர் அஹ்மேட் இயக்கிய என்றென்றும் புன்னகை படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். அந்த படத்தின் பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பை பெற்றன.
உதயநிதி நடித்த மனிதன் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தாலும் அஹ்மேட் மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜிடம் தஞ்சம் புகுவார் என பேசப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த தாம் தூம், எங்கேயும் காதல், அண்மையில் வெளியாகிய வனமகன் படங்களுக்கும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார்.
ஜெயம் ரவி – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் வெளியாகிய மூன்று படங்களின் பாடல்களும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.