பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10-

பக்காத்தான் ஹாராப்பான் மற்றும் எதிர்கட்சித் தரப்பினருக்கும் சமமான ஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்று கிள்ளான் தொகுதி எம்.பி, சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார். முன்னதாக பக்காத்தான் எம்.பி.க்களுக்கு வெ.5 லட்சம் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வெ.1 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு வழங்கப்படுவது குறித்து சார்ல்ஸ் கருத்துரைத்தார்.

அப்படி ஜனநாயகம் வளர வேண்டும் என்று விரும்பினால் ஆட்சியாளருக்கு இணையானத் திறன் மற்றும் பலம் கொண்ட எதிர்கட்சியினர் தேவைப்படுகின்றனர். இதனால் மக்களும் பயனடைவதோடு அவர்களின் நலன்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.

புதிய மலேசியாவின் எதிர்காலம் உண்மையில் ஜனநாயகத்த்திற்குச் செழிப்பூட்டும் வகையில், மக்களின் நலன் காக்கக்கூடிய சிந்தனை, கொள்கை, மற்றும் நடவடிக்கைகளைக் கொண்டதாகும். அதுவும் மக்கள் நலன் காக்கும் அரசு மற்றும் விமர்சிக்கக்கூடிய எதிர்க்கட்சி இருந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று பத்திரிகையாளர்களிடம் சார்ல்ஸ் குறிப்பிட்டார்.