வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > மக்கள் விரும்பினால் பணியை தொடர்வேன்! துன் மகாதீர்
அரசியல்முதன்மைச் செய்திகள்

மக்கள் விரும்பினால் பணியை தொடர்வேன்! துன் மகாதீர்

தோக்கியோ, ஜூன் 11-

பிரதமராக தாம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென மக்கள் விரும்பினால், அப்பதவியில் தொடர்வேன் என பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

இதில் இன்னும் 2 ஆண்டுகளில் எனக்கு 95 வயதாகி விடும் என்பதால் நான் இன்னும் எவ்வளவு காலம் இருப்பேன் என்று எனக்கே தெரியாது.

இப்போது நான்தான் உலகின் மிக அதிக வயதானப் பிரதமர். அதிலும் 95 வயதை அடையும் காலத்தில் தொடர்ந்து பிரதமராக இருந்தால் அது ஒரு சாதனையாகி விடும் என்று நிக்கெய் மாநாட்டில் உரையாற்றிய போது மகாதீர் குறிப்பிட்டார்.

நான் இன்னமும் நாட்டிற்குத் தொடர்ந்து சேவை செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். அப்படி மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள் என்றால் அவர்களின் விருப்பப்படியே நான் நடப்பேன் என்றார்.

இதனிடையே, வரும் 2020ஆம் ஆண்டில் தூரநோக்கு இலட்சியத் திட்டத்தை அடைய முடியாது என்றே நான் கருதுகிறேன். ஆனால் மலேசியர்கள் அனைவரும் சரியான தடத்தில் கொள்கைகளுடன் கடுமையாக உழைத்தால் அந்த நிலையை வரும் 2025ஆம் ஆண்டில் அடைந்து விடலாம் என்று மகாதீர் குறிப்பிட்டார்.

இதன் கொள்கைகள் இதற்கு முன் இருந்த பிரதமர்களின் அடிப்படையில் மாற்றப்பட்டன. அதனால் இந்த 2020 தூரநோக்கு இலக்கு 2025ஆம் ஆண்டில்தான் அடையப்படும் என்று மகாதீர் மேலும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன