போர்ட்டிக்சன், அக் 13
போர்ட்டிக்சனின் இன்று நடைபெற்ற இடைத்தேர்தலின் அதிகாரப்பூர்வமற்ற வாக்கு நிலவரங்களின் படி டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 27,542 வாக்குகளை பெற்று முன்னணியில் இருக்கிறார்.
இரவு 7.40 வரை டத்தோஸ்ரீ அன்வார் 27,452 வாக்குகளையும் பாஸ் கட்சியின் வேட்பாளர் முகமட் நஸ்ரி மொக்தார் 6,848 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர்களான டான்ஸ்ரீ முகமது இசா அப்துல் சாமாட் 3,830 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
இதர வேட்பாளர்களான முகமது சைபுல் புஹாரி அஸ்லான், ஸ்டீப் சான் கேங் லியோங், கான் சி யுவேன், லவ் செக் யான் ஆகியோர் சொற்ப வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். இதில் அன்வாரின் வெற்றி உறுதியானது.
இதற்கு முன் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ டேனியல் பாலகோபால் அப்துல்லா செப்டம்பர் 12ஆம் தேதி பதவி விலகியதை தொடர்ந்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மீண்டும் நாடாளுமன்றத்திற்கு செல்லும் வகையில் போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் தேர்தலில் போட்டியிட்டார்.
கடந்த பொது தேர்தலில் கடற்படையின் முன்னாள் அதிகாரியான டேனியல் பாலகோபால் 17,710 வாக்குகளில் தேசிய முன்னணியின் டத்தோ வி.எஸ்.மோகன் மற்றும் பாஸ் கட்சியின் மாபுஸ் ரோஸ்லானை தோற்கடித்தார்.